சுழற்சி முறை வகுப்புகள் தேவையற்றவை: அமைச்சர் செங்கோட்டையன்

By செய்திப்பிரிவு

பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் சுழற்சி முறையிலான வகுப்புகள் நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித்துறைக்காக நுங்கம்பாக்கம், டிபிஐ வளாகத்தில் 1.22 லட்சம் சதுர அடியில் ரூ.39.9 கோடி மதிப்பில் 6 தளங்களைக் கொண்ட பிரம்மாண்ட அலுவலகத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலுவலகத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து ஆய்வு செய்து, விரைவில் முதல்வரிடம் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

பள்ளிகள் திறந்த பிறகு ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்படும். சுழற்சி முறையிலான வகுப்புகள் தேவையற்ற ஒன்று. நம்மிடத்திலே போதிய வகுப்பறைகள் உள்ளன. மருத்துவக் குழு அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும். இதற்கான வசதிகள் நம்மிடத்தில் உள்ளன.

எப்படி மாணவர்களை அமர்த்த வேண்டும் என்று கருதுகிறோமோ அதற்கான வசதிகளோடு 90 சதவீத வகுப்பறைகள் உள்ளன'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

20 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்