‘நீட்’ தேர்வில் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்பு: ‘கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் வெளியாகும்

By செய்திப்பிரிவு

‘நீட்’ தேர்வை 90 சதவீத மாணவர்கள் எழுதியுள்ளனர். கேள்விகளுக்கான விடைகள் (கீ ஆன்சர்) ஒரு வாரத்தில் வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 2020-21-ம்கல்வி ஆண்டு மருத்துவப் படிப்புமாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் உட்பட நாடுமுழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 90 சதவீதத்தினர் தேர்வில் பங்கேற்றனர்.

‘நீட்’ தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) பாடங்களில் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் 4 பதில்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும் (நெகட்டிவ்) என அறிவிக்கப்பட்டிருந்தது.

நடந்து முடிந்த தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ‘நீட்’ தேர்வு விடைகள் பட்டியல் (கீ–ஆன்சர்) மற்றும் விடைத்தாள் நகல் சில தினங்களில் www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது.

இம்மாதம் இறுதிக்குள் ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிடவும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

4 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

10 mins ago

ஆன்மிகம்

20 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்