நடப்பு கல்வி ஆண்டில் 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்: கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கல்லூரிக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரிக்கல்வி இயக்குநர் சி.பூர்ணசந்திரன், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக 7 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று பேரவைகூட்டத்தொடரில் 110 விதியின்கீழ்முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி கோவை, கரூர்,நாகப்பட்டினம், அரியலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் புதிதாக கல்லூரி கள் தொடங்கப்பட உள்ளன.

இதற்கான கட்டிடத்தை தேர்வு செய்து நடப்பு கல்வி ஆண்டு (2020-21) முதல் மாணவர் சேர்க்கைநடத்தி கல்லூரிகள் செயல்படுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய கல்லூரிகளில் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பி.காம், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் மட்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இதற்கிடையே, புதிய கல்லூரிகள் தொடங்கியதற்கு பேராசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது விண்ணப்பித்துஇடம் கிடைக்காத மாணவர்களுக்கு புதிய கல்லூரிகளின் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்