38 பேருக்கு சிபிஎஸ்இ ஆசிரியர் விருது: மத்திய கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்

By செய்திப்பிரிவு

38 பேருக்கு சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கான விருதுகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வழங்கினார். கரோனா பெருந்தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுகள் அனைத்தும் காணொலி முறையில் வழங்கப்பட்டன.

இதுகுறித்து சிபிஎஸ்இ, ''2019- 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் அர்ப்பணிப்பை மேம்படுத்துவதில் மதிப்புமிக்க பங்களிப்பை அளித்த சிபிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ உடன் இணைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளது.

கற்பித்தல் மொழிகள், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி, கணிதம், பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் அல்லது நுண்கலை ஆகிய துறைகளில் சிறப்பாக இயங்கும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளி ஆலோசகர்கள், துணை முதல்வர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் 38 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கான சிபிஎஸ்இ ஆசிரியர் விருதுகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று வழங்கினார். கரோனா பெருந்தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுகள் அனைத்தும் காணொலி முறையில் வழங்கப்பட்டன.

விழாவில், கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் அனிதா கார்வால், சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அஹூஜா மற்றும் சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விருதில் சான்றிதழுடன், சால்வை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் விருதுக்குத் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்