வேலையிழந்துள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணி வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

தனியார் பள்ளியில் பணிபுரிந்து தற்போது வேலை இல்லாமல் உள்ள ஆசிரியர்களை தேவைப்பட்டால் அரசுப் பள்ளிக்கு தற்காலிக பணிக்கு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும், என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோபியில்அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அறியாமை என்னும் இருள்நீக்கி அறிவு எனும் தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள். இந்தாண்டு நல்லாசிரியர் விருதுக்கு 375 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 1 முதல் பள்ளி திறக்கும் வரை சத்துணவு பொருட்களுடன் 10 முட்டை வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும்என முதன்மைக் கல்வி அலுவலர்மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.

கேரளாவில் அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு என கூறினாலும், பள்ளி திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறு தற்போது ஏதும் இல்லை. தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றகுற்றச்சாட்டை புகாராக முன்வைத்தால் அரசு பரிசீலிக்கும்.

அரசுப் பள்ளிகளில் 7,500 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் தேவைப்பட்டால் தனியார் பள்ளியில் பணிபுரிந்து தற்போது வேலை இல்லாமல் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்களை அரசுப் பள்ளிக்கு தற்காலிக பணிக்கு எடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்