இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும்: அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

By செய்திப்பிரிவு

இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலால் பள்ளி, கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இறுதிப் பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என்று உயர் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வரும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, இரண்டு நாட்களுக்கு முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் பயிலும் மாணவர்கள் மற்றும் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என்றும், இறுதிப் பருவத் தேர்வுகள், மாணவர்கள் நேரில் வந்து எழுதக்கூடிய தேர்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுதுவது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து இன்று தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள அமைச்சர் கே.பி.அன்பழகன், இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, ''பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் ஆன்லைன் மூலமும் நடத்தப்படும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் தேர்வு தொடர்பாக அந்தந்தப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளே முடிவு செய்துகொள்ளலாம்.

வெளிமாநில, வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்காக ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடத்தப்படும். பிற மாணவர்களுக்கு ஆஃப்லைன் வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

தனிமைப்படுத்தல் முகாம்களாகச் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படக்கூடாது. இதற்குப் பதிலாகப் பிற கல்லூரிகளில் தேர்வு மையம் அமைக்கலாம். இதற்கான விரிவான தேர்வு அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் விரைவில் வெளியிடப்படும்'' என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்