ஜேஇஇ நுழைவுத்தேர்வு: ஊரடங்குப் பகுதிகளில் உள்ளோரைத் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி புதுச்சேரியில் மனு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ஊரடங்குப் பகுதிகளில் உள்ள மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. நுழைவு தேர்வு செப்.1 முதல் 6 வரை நடைபெற உள்ளது. இதனால் புதுச்சேரியில் 32 உள்ளூர் ஊரடங்குப் பகுதிகளில் உள்ள மாணவர்களைப் பாதுகாப்பாகத் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆளுநர், முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி அளித்த மனு விவரம்:

''செப்டம்பர் 1 முதல் 6 வரை பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வு நடைபெற உள்ள சூழ்நிலையில், புதுச்சேரி அரசு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை 32 பகுதிகளில் உள்ளூர் ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்குப் பகுதியில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுதச் செல்ல முடியுமா? முடியாதா? என்று தெரியாததால் அச்சத்தில் உள்ளனர். ஆகவே தேர்வு எழுத உள்ள மாணவர்களைப் பாதுகாப்பாகத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.

ஜேஇஇ தேர்வு எழுத வெளி மாநிலங்களில் இருந்தும் மற்ற பிராந்தியங்களிலும் இருந்து மாணவர்களுடன் பெற்றோர்கள் வரும் சூழ்நிலை உள்ளது. அவர்களை எல்லையிலேயே கரோனா பரிசோதனை செய்து புதுச்சேரியில் எங்கு தங்குகின்றனர் என்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கரோனா சூழலில் பாதுகாப்பு கருதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்