அண்ணா பல்கலை. இறுதி பருவத்தேர்வு: விரைவில் தேர்வு காலஅட்டவணை

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி பருவத்தேர்வு நடத்துவதற்கான பணிகளை அண்ணா பல்கலை. தீவிரப்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகளில் பருவத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை நிலவுகிறது. இதையடுத்து இறுதி பருவத்தேர்வைத் தவிர, மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இறுதி ஆண்டு பருவத்தேர்வையும் ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. விசாரணை முடிவில் இறுதி பருவத்தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வுப் பணிகள் தீவிரம்

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகம் இறுதி பருவத்தேர்வை இணையவழியில் நடத்துவதற்கான முயற்சிகளில் ஏற்கெனவே ஈடுபட்டிருந்தது. தற்போது நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து தேர்வுக்கான பணிகளை அண்ணாபல்கலைக்கழகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான புதிய மாதிரி வினாத்தாள் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அரசின் ஒப்புதல்பெற்று தேர்வுக்கால அட்டவணையை விரைவில் வெளியிடவும், செப்டம்பருக்குள் தேர்வைநடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்