கலை. அறிவியல் மாணவர் சேர்க்கை செப்.4-ம் தேதி வரை நடைபெறும்: கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கலை, அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ஆக.28 முதல் செப்.4-ம் தேதி வரை நடத்தப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்காக இணையவழியில் 3 லட்சத்து 12,883 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 2 லட்சத்து 25,819 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதையடுத்து வழக்கம்போல் கல்லூரிகள் அளவில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதற்காக அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தற்போது வெளி யிட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர்சி.பூரணசந்திரன், அனைத்துகல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: மாணவர் களிடம் பெற்றுள்ள விண்ணப்ப தரவுகளை மந்தன முறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மேலும், மாணவர்கள் பதிவேற்றிய ஆவணங்களின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது அந்தந்த கல்லூரி முதல்வரின் பொறுப்பாகும். அதேநேரம் மாணவர்கள் யாரேனும் உரிய ஆவணங்களை பதிவு செய்யா மல் இருப்பின், அவர்களின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தேவையான சான்றி தழ்களை இணையவழியில் பெற்று சரிபார்க்க வேண்டும்.

அதன்பின் சிறப்புப் பிரிவு மற்றும் பாடவாரியாக தரவரிசைப் பட்டியல் தயார்செய்து, இடஒதுக்கீடு விதிமுறைகளின்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க வேண்டும். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்து இருந்தால் ஒவ்வொரு பாடப்பிரிவின் தரவரிசைப் பட்டியலிலும் மாணவர் பெயர் இடம்பெற வேண்டும்.

அதேபோல், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தேர்வாகும் மாணவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பத்தின்படி ஒப்புதல் கடிதம் பெற்றுஇடங்களை ஒதுக்க வேண்டும். எனினும், சம்பந்தபட்ட மாணவரை தொடர்பு கொள்ள முடியாதபட்சத்தில் விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ள விருப்ப வரிசை அடிப்படையில் ஒதுக்கீட்டு ஆணை அளிக்கலாம்.

ஒரு இடத்துக்கு குறைந்தது 2 பேரைத் தேர்வுசெய்து சான்றிதழ்களை சரிபார்த்து இறுதி சேர்க்கை பட்டியலை வெளியிட வேண்டும். மேலும், தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை வழிமுறைகள் மற்றும் கட்டண விவரங்களை ஆக. 26-ம் தேதிக்குள் தெரிவிக்கவேண்டும்.

அதன் பின்னர் சிறப்புப் பிரிவுக்கு ஆக.28-ம் தேதியும், பொதுப் பிரிவுக்கு ஆக.29 முதல் செப்.4-ம் தேதி வரையும் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும். மாணவர்கள் கட்டணத்தை இணையவழியில் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

அசல் சான்றிதழ் சமர்ப்பிப்பு

இதுதவிர மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் நேரில் அல்லது அருகே உள்ள வேறு அரசுக் கல்லூரிக்கு சென்று சேர்க்கை ஆணை, கட்டண ரசீது, அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் விவரங்களை தேர்வான மாணவர்களுக்கு உரிய முறையில் கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும்.

பெற்றோரை அழைத்துவர வேண்டாம்

அதேபோல், சேர்க்கை யின் போது கரோனா தடுப்புநடைமுறைகள் தவறாது பின் பற்றப்பட வேண்டும். சேர்க்கை மையங்களுக்கு பெற்றோரை மாணவர்கள் அழைத்துவர வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டுபோல 20 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கோரப் படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

45 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்