அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா சூழலில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் கடந்த 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் சில அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது கட்டாயப்படுத்திக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே நம்பியூரில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வழங்கினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இதுவரை அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 50 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் உட்பட யாரும் எதற்காகவும் பணம் வசூலிக்கக் கூடாது.

இதுபோன்று ஏற்கெனவே எழுப்பப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரிக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

7 mins ago

இந்தியா

19 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்