10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5,248 மாணவர்கள் விடுபட்டது ஏன்?- கல்வித்துறை விளக்கம்

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 5,248 மாணவர்களின் விவரங்கள் விடுபட்டது ஏன் என்பதற்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 முதல் ஏப்.13 வரை நடைபெற இருந்தது. இத்தேர்வை 9,45,077 மாணவ, மாணவிகள் எழுதுவதாக இருந்தனர். இதற்கிடையே கரோனா பரவல் காரணமாக பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் முந்தைய பருவங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், மொத்தமாக 9,39,829 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மீதமுள்ள 5,248 மாணவர்களின் விவரங்கள் விடுபட்டது ஏன் என்று கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ''விடுபட்ட 5,248 மாணவர்களில் 231 மாணவர்கள் இறந்துவிட்டனர். 658 மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் பெற்று பள்ளியை விட்டு இடைநின்றவர்கள் ஆவர்.

மீதமுள்ள 4,359 மாணவர்கள் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு எழுதாதவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு முழுமையாக வராதவர்கள்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்