‘இந்து தமிழ் திசை’ - ‘சாவித்ரி போட்டோ ஹவுஸ்’ நடத்தும் ‘புகைப்பட பயிற்சி’ வழிகாட்டி ஆன்லைன் நிகழ்ச்சி: ஆக.15-ல் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை ஆன்லைன் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு ‘சாவித்ரி போட்டோ ஹவுஸ்’ உடன் இணைந்து ‘புகைப்பட பயிற்சி’ வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கி, 5 நாட்கள் ஆன்லைனில் நடக்க உள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி

இந்நிகழ்வில், புகைப்படம் எடுப்பது எப்படி, எந்த கோணத்தில் படமெடுத்தால் சிறப்பாக இருக்கும், லென்ஸை பயன்படுத்தும் முறை, எக்ஸ்போஸர் மீட்டரிங் முறைகள், லைட்டிங் அமைப்பது, புகைப்பட கலவை, எடிட்டிங் மென்பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை புகழ்பெற்ற புகைப்பட தொழில்நுட்ப வல்லுநர் விளக்கம் அளிக்க உள்ளார்.

கோவையைச் சேர்ந்த புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் டி.ஏ.நடராஜன் இந்நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறார். இவர் புகைப்படக் கலையில் 39 ஆண்டுகள் அனுபவம் உடையவர். பன்முகப் பார்வையோடு புகைப்படங்களை எடுப்பதில் உலக அளவில் பாராட்டு பெற்றவர்.

மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு

இந்தப் பயிற்சியில் 8 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். தினமும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். பங்கேற்க விரும்புபவர்களிடம் ஏதேனும் ஒரு வகை கேமரா இருக்கலாம். DSLR கேமரா இருந்தால் சிறப்பானது. பங்கேற்கும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் பங்கேற்க ரூ.499/- செலுத்தி, https://connect.hindutamil.in/Photography.php என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்