பருவத் தேர்வுக் கட்டணத்தை திருப்பி அளிக்க சாத்தியம் இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த கல்வியாண் டில் உயர்கல்வி பருவ தேர்வு களுக்கு மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி வழங்க சாத்தியமில்லை என உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள் ளார்.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனி நபருக்கும் நாளொன்றுக்கு கூடுதல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று இரவு ஆய்வுக் கூட்டம் நடந்தது. தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடந்த இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர் களிடம் அமைச்சர் கூறியது:

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் உயர் கல்வி பயின்ற மாணவர்களின் பருவத் தேர்வுகள் கரோனா தொற்று சூழலால் ரத்து செய்யப்பட்டன. அப்போது, மாணவர்கள் செலுத் திய தேர்வு கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என சில அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை.

இருப்பினும் இதுகுறித்து ஆராயப்படும். இந்த ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரி களில் சேர இதுவரை 3 லட்சத்து 16 ஆயிரத்து 795 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்