பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகளை நடத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் அரசின் பரிசீலனையில் உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக கல்வித் துறை சார்பில் பெற்றோரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அதேநேரம்மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு இணையவழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு பள்ளிக்கல்விஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பில்லை. அதுகுறித்த எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. கரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்ததும், மக்களின் கருத்துகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்படும். சூழ்நிலை சரியானவுடன் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

8 mins ago

இந்தியா

48 mins ago

கருத்துப் பேழை

41 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்