கிராம நூலகம், வீட்டுத் திண்ணைகள்- பள்ளிகளைத் திறக்க அசாம் திட்டம்: முறைசாரா வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியீடு

By செய்திப்பிரிவு

பள்ளிகளை மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ள அசாம் அரசு, முறைசாரா வகுப்புகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, ''முறைசாரா வகுப்புகள் அனைவருக்கும் கட்டாயமில்லை. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இணையலாம். எனினும் குறைந்தது 8 அடி தனிமனித இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயம்.

முன்னதாக ஆகஸ்ட் 23 முதல் 30-ம் தேதி வரை மாணவர்கள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். கரோனா இல்லாதவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்துகொள்ள முடியும். வகுப்புகள் அனைத்தும் தொடர்ந்து கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படும்.

வகுப்புகள் எப்படி?

1 முதல் 4-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். வீட்டுப்பாடங்கள் பெற்றோரிடம் வழங்கப்படும். 5 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அருகிலுள்ள கிராம நூலகம், திறந்தவெளி நிலம், வீட்டுத் திண்ணைகள் உள்ளிட்ட பகுதிகளில் முறைசாரா வகுப்புகள் நடக்கும். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மூத்த மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வகுப்பெடுக்கலாம்.

9 முதல் 12-ம் வகுப்பு வரை அருகிலுள்ள பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் வகுப்பில் கலந்துகொள்ள அந்தப் பள்ளியில் ஏற்கெனவே சேர்ந்திருக்க வேண்டியதில்லை. முறைசாரா வகுப்புகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்தால் போதும். மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பிரிவுகள் அமைக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் அதிகபட்சமாக 15 மாணவர்கள் இருப்பர்.

அதேபோல இறுதியாண்டுக் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் https://ssa.assam.gov.in/portlets/proposed-guideline-for-imparting-informal-education-sop என்ற இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

க்ரைம்

20 mins ago

சுற்றுச்சூழல்

26 mins ago

இந்தியா

57 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்