ஆன்லைன் கல்விமுறை; பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனைக் கூட்டம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும் ஆன்லைன் கற்பித்தல் விதிமுறைகளைப் பற்றியும் அமைச்சர் செங்கோட்டையன், இன்று துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மார்ச் 16-ம் தேதி முதல் கால வரையின்றி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன், துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், துறை ஆணையர் சிஜு தாமஸ் வைத்யன், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் பழனிசாமி மற்றும் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, தேர்வு உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், 10-ம் வகுப்புத் தேர்ச்சி அறிவித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதா, கிரேடு வழங்குவதா என்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அதேபோல பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் கல்வி முறைகள் குறித்து மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது. அதை அப்படியே ஏற்பதா, மாற்றங்கள் செய்வதா என்பது குறித்து தமிழக அரசு ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்