சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்: நாமக்கல் மாணவிக்கு பிரதமர் மோடி பாராட்டு

By கி.பார்த்திபன்

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் லாரி ஓட்டுநரின் மகளை, 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இது மாணவியின் குடும்பத்தினரை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். இதன்படி, 67-வது 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று (ஜூலை 26) ஒலிபரப்பானது.

இதில் நாமக்கல்லைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன் என்பவரின் மகள் என்.என்.கனிகா, இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்ததை பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பேசி வாழ்த்துத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி: கோப்புப்படம்

மேலும், மாணவிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்களையும் வழங்கினார். தவிர, அவரது சகோதரி ஷிவானி மருத்துவம் படித்து வருவதையும் குறிப்பிட்டு வாழ்த்துத் தெரிவித்தார். இது மாணவி கனிகாவின் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து கனிகா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகையில், "பிரதமரின் வாழ்த்து மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் பேச்சு அமைந்துள்ளது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்