சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான கல்வி: சிபிஎஸ்இ வழிகாட்டல்

By செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான கல்வியை வழங்குவது குறித்து சிபிஎஸ்இ வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா காலத்தில் சரியான சமூக வெளிப்பாடு இல்லாத நிலையில், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இது உணர்வுபூர்வமாக அவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கோவிட்-19 காலத்துக்கு முன்னதாகப் பள்ளிகளும் சமூக நிறுவனங்களும் கையாண்ட இந்தச் சூழலை, பெற்றோர் தற்போது தனியாக, அதேசமயம் முறையாகக் கையாள வேண்டியது அவசியம்.

சிறப்புக் குழந்தைகளுக்கு, எளிதில் அணுகக்கூடிய வகையிலான கற்றல் முறைகள் கிடைப்பதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைக்கு ஏற்ப, ஆன்லைன் கல்விக்கு மாற்றாக ஒலி, புகைப்படங்கள், தலைப்புகள், பெரிதாக அச்சிடப்பட்ட வாக்கியங்கள், சைகை மொழித் தெரிவு என அனைத்து வகைமைகளிலும் கற்றல் உபகரணங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

சிறப்புக் குழந்தைகளுக்கு, நெகிழ்வான திட்டமிடல் மற்றும் காலக்கெடு, உதவிகரமான தொழில்நுட்பம், எளிமையான வீட்டுப் பாடங்கள் ஆகியவற்றைப் பள்ளிகள் அறிமுகப்படுத்த வேண்டும்.

சிறப்புக் குழந்தைகளைத் தொலைதூரக் கல்வி மூலம் எவ்வாறு அணுக வேண்டும் என்று ஆசிரியர்களுக்குப் பள்ளிகள் பயிற்சி அளித்து வழிகாட்ட வேண்டும்.

சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் ஆலோசகர்களின் ஆலோசனைகளையும் பெறலாம்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்