ஆகஸ்ட் முதல் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த நம்பியூரில் ரூ.2 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டிலேயே முதன்முதலாக தொலைக்காட்சி சேனல்கள் மூலம் தமிழக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் 14 தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக பாடங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு மற்றும் பாடங்கள் குறித்து 18 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் அறிக்கை தயார் நிலையில் உள்ளது. அவற்றை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறு கூட்டலுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இம்முறையானது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் இதுவரை 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

விளையாட்டு

18 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

45 mins ago

இந்தியா

30 mins ago

சினிமா

54 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்