திருவள்ளூர் ராகவேந்திர சுவாமி மடத்து அர்ச்சகரின் மகள் பிளஸ்-2வில் 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் ராகவேந்திர சுவாமி மடத்தின் அர்ச்சகரின் மகள் பிளஸ்-2 பொதுத் தேர் வில் 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

திருவள்ளூர் ராகவேந்திர சுவாமி மடத்தின் அர்ச்சகர் ராகவேந்திரன் மகள் ஹரிணி பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ்-99, ஆங்கிலம்-98, பொரு ளாதாரவியல்-100, வணிகவியல்-100, கணக்கு பதிவியல்-100, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்-100 என, 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, ஹரிணி தெரி வித்ததாவது: திருவள்ளூர் கலவல கண்ணன் செட்டிஸ் இந்து மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவியான நான், பிளஸ்-2 தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

90 சதவீதத்துக்கு மேலான மதிப் பெண்களைபெற வேண் டும் என்ற நோக்கில், பள்ளியில் நாள்தோறும் நடத்தப்படும் பாடங்களை அன்றே படித்து முடித்துவிடுவேன். என் கடின உழைப்பும், பள்ளி ஆசிரியர் கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டல்தான் நான் அதிக மதிப்பெண்களை பெற காரணம். சி.ஏ. படிப்பதுதான் என் லட்சியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹரிணியின் தந்தை ராகவேந்திரன் தெரிவித்ததா வது:

பி.எஸ்சி. புள்ளியியல், ஏ.எம்.ஐ.இ (பொறியியல்) படித்த நான், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன் றில் 7 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்தேன்.

இந்நிலையில், எங்கள் மூதாதையருக்கு சொந்த மான ஆஞ்சநேயர் கோயில் புதுப்பிக்கப்பட்டு, ராகவேந்திர சுவாமி மடமாக மாற்றப்பட்டது. அந்த மடத் தின் அர்ச்சகராக கடந்த 18 ஆண்டுகளாக இருந்து வரு கிறேன். எனக்கு 2 குழந்தைகள். இதில், மகன் அக்ஷோப்யா, சென்னையில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் பி.எஸ்சி., 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மகள் ஹரிணி பிளஸ்-2 பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெறுவார் என, எதிர்ப்பார்த்தோம். மாநில அளவில் சிறப்பிடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கவில்லை. இது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

5 hours ago

மேலும்