சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு; மாணவிகளே அதிகத் தேர்ச்சி: மெரிட் பட்டியல் இல்லை

By பிடிஐ

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் ஒட்டுமொத்தமாக 88.78% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சிபிஎஸ்இ வாரிய 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், 12,109 பள்ளிகள் கலந்துகொண்டன. 4,984 தேர்வு மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. எனினும் கரோனா தொற்று காரணமாக தேர்வுகள் முழுமையாக நடைபெறவில்லை. நடைபெறாத தேர்வுகளுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நாடு முழுவதும் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 11,92,961 மாணவர்கள் கலந்துகொண்ட தேர்வில் 10,59,080 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.78% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 5.38 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு மெரிட் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடவில்லை.

இதில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் பகுதி 97.67 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளது. பெங்களூரு 97.05 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், சென்னை 96.17 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.15 ஆகவும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.19 ஆகவும் உள்ளது. கல்வி நிலையங்களைப் பொறுத்தவரையில் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் 98.70 சதவீதத்துடன் முதலிடத்திலும் கேந்திரிய வித்யாலயாக்கள் 98.62 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை, cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் காணலாம். 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்