அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 5 டி.வி.சேனல்கள் மூலம் வகுப்புகள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் டி.வி. சேனல்கள் மூலம் வரும் 13-ம் தேதிக்குப் பிறகு வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே ரூ.1.24 கோடி மதிப்பில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளி மாணவர்களில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு எழுதாதவர்கள், பள்ளிக்கு வராதவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. கல்வியாளர்களுடன் ஆலோசித்தபின்பு இவர்களின் தேர்ச்சி குறித்து முதல்வர் அறிவிப்பார்.

கல்வியாளர்களின் கோரிக் கையை ஏற்று, பழைய பாடத்திட்டமே தொடரும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 13-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் 5 டி.வி.சேனல்கள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும்.

பிளஸ் 2 கடைசித் தேர்வை 34,482 மாணவர்கள் எழுதவில்லை. இதில் 718 மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளித்துள்ளனர். விருப்பம் தெரிவிக்காதவர்களும் தேர்வு எழுதலாம்.

தேர்வு முடிந்த உடன் 4 நாட்களில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

நீட் பயிற்சி

நீட் தேர்வு ஒத்திவைக்கப் பட்டுள்ள நிலையிலும், தொடர்ந்து அரசு சார்பில் 7,500மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

விளையாட்டு

11 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்