கல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை செயல்படக்கூடாது: மத்திய அரசு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலர் அனிதா கர்வால், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உள்துறை அமைச்சகம் ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்தாலும், பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஜூலை 31-ம் தேதி வரை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. முக்கிய தேவைகள் இல்லாதபட்சத்தில் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை கல்வி நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். அதேநேரம் இணையவழி கற்றல்மற்றும் தனிநபர் இடைவெளியுடன் கூடிய கற்பித்தல் செயல்பாடுகளுக்கு அனுமதி நீட்டிக்கப்படுகிறது.

மேலும், இந்தக் காலகட்டத்தை ஆசிரியர்கள் தங்களின் கல்விசார் செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் இந்த வழிகாட்டுதல்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகப் பின்பற்றவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

27 mins ago

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்