2018- 19 ஆம் ஆண்டில் பி.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: கட்டணத்தைத் திருப்பி அளிப்பதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018- 2019 ஆம் ஆண்டில் பி.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதி கிடைக்காததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நடத்தப்படும் பி.எட். இரண்டு ஆண்டுகளுக்கான பட்டப்படிப்புக்கான அங்கீகாரத்தை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வழங்குகிறது.

இந்த நிலையில், யுஜிசி அங்கீகாரத்தை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பெறவில்லை. இதனால் திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட 2018-2019 ஆம் ஆண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய யுஜிசி உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து 2018-19 ஆம் ஆண்டு மாணவா் சேர்க்கை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்காக மாணவர்கள் செலுத்திய அனைத்து வகைக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 400-க்கும் அதிகமான மாணவர்கள் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பில் சேர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

29 mins ago

கல்வி

22 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

25 mins ago

ஓடிடி களம்

32 mins ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

மேலும்