மாணவர்களுக்கு ஷில்பா ஷெட்டியின் நேரலைப் பயிற்சி: யோகா தினத்தை முன்னிட்டு சிபிஎஸ்இ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, நடிகை ஷில்பா ஷெட்டியின் நேரலை யோகா பயிற்சியை வழங்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சிபிஎஸ்இ தனது மாணவர்களுக்கு யோகா பயிற்சியை வழங்க முடிவெடுத்துள்ளது.

’ஆரோக்கிய இந்தியா’ திட்டத்தின் கீழ் நடிகையும் புகழ்பெற்ற யோகா பயிற்சியாளருமான ஷில்பா ஷெட்டி, யோகா பயிற்சியை நேரலையாகச் செய்துகாட்ட உள்ளார்.

இந்தச் சிறப்பு நிகழ்வு ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இது ஆரோக்கிய இந்தியா யூடியூப் பக்கத்திலும் சிபிஎஸ்இ வாரியத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் நேரலையாக ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

யோகா குறித்த கேளிக்கை மற்றும் அறிவுபூர்வமான அம்சங்களைக் குழந்தைகளுக்கு உரிய முறையில் கடத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்