இறுதி செமஸ்டர் தேர்வையும் ரத்து செய்த புதுச்சேரி பல்கலைக்கழகம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி பல்கலைக்கழகம் கரோனாவால் இதர செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்த நிலையில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வையும் ரத்து செய்துள்ளது.

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சீராகாத நிலையில் புதுச்சேரியில் கல்லூரிகளுக்கான தேர்வை ஜூலையில் நடத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது. கரோனா உச்சத்தில் இருந்த சூழலில் தேர்வை நடத்த மாணவர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி, போராட்டங்கள் நடந்தன.

மத்திய அரசு தேர்வு தொடர்பாக எவ்வித முடிவும் எடுத்து அறிவிப்பை வெளியிடவில்லை. அதனால் தேர்வு அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீந்த் சிங்கிடம், முதல்வர் நாராயணசாமி கோரினார். இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக இறுதியாண்டுத் தேர்வு தவிர்த்து இதர செமஸ்டர்களில் தேர்வு இல்லை. உள் அக மதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லாசர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு:

’’புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கிடையாது. உள் அகமதிப்பீடு மூறை மூலம் மதிப்பெண்கள் தரப்படும். இம்முறையானது இறுதி செமஸ்டரில் உள்ளோருக்கு அனைத்து ரெகுலர் தேர்வுத் தாள்களுக்கும். தோல்வியடைந்து எழுத வேண்டிய நிலுவை தேர்வுத் தாள்களுக்கும் பொருந்தும்.

உள் மதிப்பெண்கள் வழங்குவதற்கான தற்போதைய அளவுகோல்கள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தேர்வு பதிவு, தேர்வுக் கட்டணம் செலுத்துதல், குறைந்தபட்ச வருகை போன்ற அனைத்து முறைகளும் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம்’’.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்