கல்லூரி தேர்வுகளும் ரத்தாகிறதா? -அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

கல்லூரிகளுக்கான தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தின் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது:

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் போன்றவை பல இடங்களில் கரோனா சிகிச்சை மையங்களாக செயல்படுகின்றன. இந்த சூழலில் கல்லூரி தேர்வுகளை நடத்த இயலாது. கரோனா தொற்று பாதிப்பு குறைந்த பிறகு தான் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க முடியும். அதேநேரம், மாணவர் களின் எதிர்காலத்துக்கு தேர்வு முடிவுகள் மிகவும் முக்கியமானது. தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தமிழக அரசே கல்லூரி தேர்வுகள் குறித்து முடிவுகளை இறுதி செய்யும். இவ்வாறு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்