தேர்வுகளை ரத்து செய்யுங்கள்: நாடு முழுவதும் #StudentLivesMatter பிரச்சாரத்தை முன்னெடுத்த மாணவர்கள்

By பிடிஐ

நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என சமூக வலைதளங்களில் #StudentLivesMatter என்ற பிரச்சாரத்தைக் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலைக் கல்லூரி மாணவர்கள், தங்கள் இறுதியாண்டு அல்லது இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கரோனா பேரிடர்க் காலத்தை முன்னிட்டு தேர்வுகள் இல்லாமலேயே அனைவருக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என்றும் தங்களின் கல்லூரிகளை வலியுறுத்தி உள்ளனர்.

முன்னதாக டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தேர்வுகள் இல்லாமலேயே தங்களின் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவெடுத்தன. எனினும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அவை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

இந்நிலையில், மாணவர்கள் தரப்பில், மார்ச் மாதம் கரோனா பெருந்தொற்றை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்களால் புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை என்றும் தேர்வுக்கு முழுமையாகத் தயாராகும் சூழலும் தற்போது இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள பல்வேறு மாநில மாணவர்கள், சமூக வலைதளங்களில் #StudentLivesMatter என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்