தென்காசி மாவட்டத்தில் 3 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி

By த.அசோக் குமார்

தென்காசி மாவட்டத்தில் இலத்தூர் ஸ்பெக்ட்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி இன்று தொடங்கியது.

தனி மனித இடைவெளியைப் பின்பற்றி ஓர் அறைக்கு மொத்தம் 8 நபர்கள் வீதம் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மதிப்பீட்டு மையங்கள் அனைத்தையும் தினமும் 2 முறை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் அறைக்குச் செல்லும் முன்பு சோப், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்துவிட்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

முன்னதாக, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் மையங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல் நாளான இன்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் 194 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். நாளை முதல் கூடுதலாக 844 ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுவார்கள்.

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 9-ம் தேதி வரை நடைபெறும். அடுத்த நாள் முதல் பிளஸ் 1 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெறும்.

இதற்கிடையே எஸ்எஸ்எல்சி தேர்வுகளும் தொடங்கிவிடும். பிளஸ் 1 விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்ததும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தொடங்கும் என்று தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்