நீட் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம்: தேதி மீண்டும் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த தேர்வு மையம் உள்ள நகரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நீட் தேர்வு என அழைக்கப்படுகிறது. 12-ம் வகுப்பை முடித்தவர்களும் அதே வகுப்புப் பொதுத் தேர்வை எழுதியவர்களும் நீட் தேர்வை எழுதத் தகுதியானவர்கள்.

கரோனா வைரஸ் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த தேர்வு மையம் உள்ள நகரத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. மே 31-ம் தேதி வரை இதற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தேர்வு மையம் உள்ள நகரத்தை மாற்ற கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நகரத்தை மாற்றிக்கொள்ள என்டிஏவுக்கு மாணவர்கள் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கிரெடிட்/ டெபிட் கார்டுகள்/ இணையவழி வங்கிப் பரிவர்த்தனை/ பேடிஎம் மூலமாக பணத்தைச் செலுத்தலாம்.

கரோனா காரணமாக மே 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்னும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்