10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு இ-பாஸ்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே நேரம், முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் தேர்வுகளை நடத்த கல்வித் துறை தீவிரம் காட்டி வருகிறது.​​

இதற்கிடையில், கரோனா அச்சுறுத்தலால் தேர்வின்போது தனிநபர் இடைவெளியை மாணவர்கள் பின்பற்றவும் ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்களை மட்டுமே அனுமதிக்கவும், அதற்கேற்ப மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையத்தை அமைக்கவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறும்போது, ''வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத இ-பாஸ் வழங்கப்படும்.

வெளி மாவட்டங்களில், தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும், மேலும் அவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும். பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்