150 ஏழை மாணவர்களுக்கு கரோனா நிவாரணம்: அசத்திய ஆதனக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

By கரு.முத்து

கரோனா அனைத்துத் தரப்பினரையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் தங்களிடம் படிக்கும் ஏழை மாணவர்களின் குடும்பங்களைத் தேடிப் போய், பள்ளி ஆசிரியர்கள் நிவாரண உதவியளிக்கும் மேன்மையான செயல்கள் தமிழகம் முழுவதும் அடுக்கடுக்காய் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அந்தப் பட்டியலில் ஆதனக்கோட்டை அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களும் இடம்பிடித்து இருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு கரோனா நிவாரணப் பொருட்களை வழங்க முடிவு செய்தனர். இதற்காக அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் மிகவும் வறுமையில் இருக்கும் 150 மாணவர்களின் குடும்பங்களைத் தேர்வு செய்தார்கள்.

இதையடுத்து நேற்று, ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி, சோத்துப் பாலை, குப்பையன் பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் அந்த மாணவர்களின் வீடு தேடிச் சென்று அரிசி, மளிகை, காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஆசிரியர்கள் வழங்கினர். சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த நிவாரண உதவிகளை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்