இனி 10-ம் வகுப்புப் பாடங்கள் தினந்தோறும் பொதிகை சேனலில் ஒளிபரப்பு

By செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு பாடங்கள், இன்று (ஏப்ரல் 15) முதல் டிடி பொதிகை சேனலில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப் படுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 14-க்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் மீண்டும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பல்வேறு பாடங்களைக் கற்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இணையவழிக் கற்றல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு, மேலும் பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை சேனலில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடங்களை எடுக்கின்றனர். இன்று (புதன்கிழமை) முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 min ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

வணிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்