1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி: சிபிஎஸ்இ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு மாநிலங்களின் கல்வி வாரியங்கள் தேர்வு இல்லாமலேயே 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ என்ன முடிவெடுக்கும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கோவிட் 19 சூழலைக் கருதி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை அடுத்த வகுப்புகளுக்குத் தரம் உயர்த்துமாறு சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு அறிவுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''1 முதல் 8-ம் வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்புக்குத் தேர்ச்சி அளிக்கப்படுவர். என்சிஆர்டி உடன் கலந்தாலோசிக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

ஜோதிடம்

33 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

42 mins ago

சினிமா

43 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்