மாணவர்களின் தேர்ச்சி விவரங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

By செய்திப்பிரிவு

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களின் தேர்ச்சி விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதித் தேர்வு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது . எனவே, 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த விவகாரம் சார்பாக அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை இணையதளம் மற்றும் தொலைபேசி மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.

இதுதவிர, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் தலைமையாசிரியர்கள் தங்கள் தேர்ச்சிப் பதிவேட்டில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகள் எடுப்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்''.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

47 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

55 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

மேலும்