பள்ளிகள் மூடலால் மதிய உணவை இழந்த 30 கோடி குழந்தைகள்: ஐ.நா.

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் 30 கோடி குழந்தைகள் மதிய உணவை இழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக உணவு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எலிசபெத் பைர்ஸ் கூறும்போது, ''உலகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் இலவச மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை.

இதனால் சுமார் 30 கோடி குழந்தைகள் மதிய உணவு இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான மாற்று வழிகளை ஐ.நா. ஆராய்ந்து வருகிறது. ஐ.நா. மூலம் 61 நாடுகளில் சுமார் 9 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இது போதாது.

வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை வழங்குவது, மதிய உணவை வீட்டுக்குக் கொண்டு சென்று அளிப்பது, உணவுக்காக ரொக்கம் அல்லது வவுச்சர்களை வழங்குவது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து யோசித்து வருகிறோம்'' என்று எலிசபெத் பைர்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலகம் முழுவதும் பரவி வரும் கரோனாவால் சுமார் 85 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செல்வது தடைபட்டதாகவும் அது உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய பாதி என்றும் யுனெஸ்கோ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

8 mins ago

இந்தியா

4 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்