கரோனா: மாஹே பிராந்தியத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

By செ.ஞானபிரகாஷ்

கரோனா வைரஸால் மாஹே பிராந்தியத்தில் மார்ச் 31 வரை பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவத் துறையினர் கடும் கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கேரளத்துக்கு அருகே புதுச்சேரி பிராந்தியமான மாஹே இருப்பதால், அங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. மாஹே அருகேயுள்ள கண்ணூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் அறிகுறி உள்ளதாக 59 பேர் வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. எனினும் கேரள அரசைத் தொடர்ந்து மாஹேவிலும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

அதன்படி மாஹே பிராந்தியத்தில் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் கோச்சிங் நிறுவனங்கள், அங்கன்வாடிககளை வரும் 31-ம் தேதி வரை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் 7-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மாஹேவில் பின்பற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தில் கரோனா வைரஸ் அச்சம் பரவியுள்ள சூழலில், மாஹே பிராந்தியம் முழு கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்