மருந்தியல் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

இந்திய மருந்தியல் குழுமத்தில் அங்கீகாரம் பெறுவதற்கான வழி முறைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பின் படி, உரிய அங்கீகாரம் பெற மருந்தியல் கல்வி நிறுவனங் களுக்கு அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ஏஐசிடிஇ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள அனைத்து மருந்தியல் கல்வி நிறுவனங்களும் இனி இந்திய மருந்தியல் குழுமத் தின் (பிசிஐ) அனைத்து வழிகாட்டு தலையும் பின்பற்றிதான் ஒவ் வொரு ஆண்டும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பிசிஐ-யின் வழிமுறைகளை பின் பற்றி அங்கீகாரம் பெற விரும்பும் கல்வி நிறுவனங்கள் ஏஐசிடிஇ-யில் விண்ணப்பிக்கலாம்.

வழிமுறைகளை பின் பற்ற விரும்பும் கல்வி நிறுவனங் களுக்கு ஏற்கனவே வழங்கிய விண்ணப்பத்தின்படியே 2020-2021-ம் கல்வியாண்டுக்கான அங் கீகாரம் வழங்கப்படும்.பிசிஐயின் வழிமுறைகளை பின்பற்ற முடியாத கல்வி நிறுவனங்கள், தங்களின் மறுப்பு கடிதத்தை ஏஐசிடிஇ-யின் இணைய தகவில் மார்ச் 15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும்.

அதற்கான விண்ணப்ப கட்டணம் திருப்பி தரப்படும். அவ் வாறு மறுப்பு கடிதம் வழங் காத விண்ணப்பங்கள் அனைத்துக்கும் அங்கீகாரம் பெறுவதற்கு பரிசீலனை செய்யப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்