தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினியின் பங்கு குறித்து திண்டுக்கல்லில் பயிலரங்கம்

By பி.டி.ரவிச்சந்திரன்

‘தமிழ் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பத்தின் பங்கு,’ என்ற தலைப்பில் திண்டுக்கல் ஜி.டி.என்.,கல்லூரியில் இன்று (புதன்கிழமை) பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பாலகுருசாமி பயிலரங்கிற்கு தலைமை வகித்தார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ச.மாசிலாதேவி வரவேற்றார். கல்லூரி செயலர் ரத்தினம், இயக்குனர் துரைரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குழந்தைகளுக்கு கணினி மூலம் தமிழை எளிய வழியில் கற்பிக்கும் முறைகள் குறித்து அமெரிக்கா தமிழ் அநிதத்தின் செயலர் காமாட்சி பேசினார்.

இன்றயை சூழலில் ஒருவர் முன்னேற வேண்டுமானால் தமிழை கணினியால் கற்பிக்கவேண்டியது அவசியம் என்பது குறித்து அமெரிக்கா தமிழ் அநிதத்தின் தலைவர் சுகந்திநாடார் பேசினார்.

பயிலரங்கின் முக்கியநிகழ்வாக திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி, அமெரிக்கா தமிழ் அநிதம் ஆகியவற்றின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

‘கல்வியியலில் மெய்நிகர் உண்மைகள்’ என்ற தலைப்பில் பெப்கான் தொழில்நுட்ப பயிற்சிமைய நிறுவனர் செந்தில்முருகன் பேசினார். அவர், கணினியில் தமிழ்மொழியின் முக்கியத்துவம், தமிழ்மொழி வளர்ச்சியில் கணினியின் பங்களிப்பு, தமிழ் கற்றல், கற்பித்தலுக்கு கணினி உதவும் விதங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.

கணினி பயன்பாட்டுத்துறை தலைவர் சாந்தமோனா நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்