பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது:  8.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்

By செய்திப்பிரிவு

தமிழக மாணவர்களுக்கான பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

தமிழக பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 12-ம் வகுப்புக்கு மார்ச் 2-ம் தேதி அதன்படி 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 252 மாணவிகள், 3 லட்சத்து 85 ஆயிரத்து 867 மாணவர்கள், 6,356 தனித்தேர்வர்கள், 100 சிறைக் கைதிகள் மற்றும் ஒரு 3-ம் பாலினத்தவர் அடங்குவர்.

பொதுத் தேர்வை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க அரசுத் தேர்வுத் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் காப்பி அடித்தாலோ, காப்பி அடிக்க முயன்றாலோ 2 ஆண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைக் கண்காணிக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

உலகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

மேலும்