அரசுக் கல்லூரிகளில் பாடவேளை நேரம் மாற்றம்

By செய்திப்பிரிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பாடவேளை நேரங்களில் மாற்றம் கொண்டுவர கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 114 அரசுக் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் 70 சதவீத கல்லூரிகளில் காலை, மாலை என இரு பணி நேரமுறையில் (ஷிப்ட்) வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் காலை வகுப்புகள் காலை8.45 முதல் மதியம் 1.15 மணிவரையும், மாலை வகுப்புகள் மதியம் 1.30 முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறுகின்றன. காலை நேர வகுப்பில் நிரந்தர பேராசிரியர்களும், மாலை நேர வகுப்பில் கவுரவ விரிவுரையாளர்களும் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் அரசுக் கல்லூரிகளில் உள்ள தற்போதைய நடைமுறையை மாற்றிவிட்டு, காலை 10 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடத்தஉயர்கல்வித் துறை திட்டமிட்டுள் ளது. மாணவர்களுக்கு கல்வி கற்க போதுமான நேரமின்மை மற்றும் மாலைநேர வகுப்புகளில் குறைவான மாணவர்களே படித்துவருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதியபணி நடைமுறைக்கேற்ப தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளின் விவரங்களை விரைவாக அனுப்பி வைக்கஅனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்