புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு மார்ச் 6 வரை விண்ணப்பிக்கலாம்: கட்டண விவரம் வெளியீடு

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் மார்ச் 6-ம் தேதி வரை சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் 2020-21 ஆம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு வரும் மார்ச் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் மார்ச் 10-ம் தேதி வரைவு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக, மார்ச் 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

முதல் கட்டக் கலந்தாய்வு மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மருத்துவ இடம் பெறும் மாணவர்கள் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். ஏப்ரல் 20-ம் தேதி 2-ம் கட்டக் கலந்தாய்வு நடைபெறும். இதில் இடம் பெறும் மாணவர்கள் மே 3-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இரு கட்டக் கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களுக்கு மே 5-ம் தேதி மாப்-அப் கலந்தாய்வு நடைபெறும். இக்கலந்தாய்வில் சீட் பெறும் மாணவர்கள் மே 12-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்குக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கிளினிக்கல் சார்ந்த பாடப்பிரிவுக்கு ரூ.7.59 லட்சமும், கிளினிக்கல் சாராத பாடப்பிரிவுக்கு ரூ.6.22 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் கிளினிக்கல் சார்ந்த பாடப்பிரிவுக்கு ரூ.22.77 லட்சமும், கிளினிக்கல் சாராத பாடப்பிரிவுக்கு ரூ.12.44 லட்சமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாஹே பல் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் பல் மருத்துவம் சார்ந்த கிளினிக்கல் படிப்புக்கான அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.6.22 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.14 லட்சமும், முதுநிலைப் பல் மருத்துவம் சார்ந்த பாரா கிளினிக்கல் படிப்புக்கு ரூ.5.53 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு ரூ.7.19 லட்சமும் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்