மாணவிகளிடம் நற்பண்புகளை கற்றுக் கொள்ள வேண்டும்: கோவா ஆளுநர் அறிவுரை

By செய்திப்பிரிவு

கோவா பல்கலைக்கழகத்தின் 32-வதுஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் சத்யபால் மாலிக் கலந்து கொண்டு,15 பேருக்கு பதக்கங்கள் வழங்கினார். பதக்கம் வென்ற 15 பேரில் 14 பேர்மாணவிகளாவர். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் சத்யபால் பேசியதாவது:

சிறப்புப் பதக்கங்களை பெற்ற மாணவிகளை பாராட்டுகிறேன். மாணவிகளே எல்லா பதக்கங்களையும் வென்றிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எங்கே சென்றுவிட்டனர் என்றுஎனக்கு தெரியவில்லை. மாணவர்களுக்குநான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். படிப்பில் பதக்கங்களை வெல்லும் மாணவிகள் உடல் வலிமையை நிரூபிக்க பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகின்றனர்.

நமது பெண்கள் தற்போது ராணுவ ஆயுதப் படைக்கும் செல்கின்றனர். எனவே மாணவிகளுடன் மாணவர்கள் போட்டி போட வேண்டும். ஆண்கள் தனியாக செய்வதற்கு என்று எதுவுமே இல்லை.பெண்களிடம் இருந்து உத்வேகம் போன்ற திறமையை கற்றுக் கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்