கேரளாவில் கரோனா வைரஸால் முதலில் பாதிக்கப்பட்ட மாணவியும் நலமாக வீடு திரும்பினார்

By செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் டிஸ்சார்ஜ் ஆனநிலையில் முதலில் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியும் நலமுடன் வீடு திரும்பினார்.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள மருத்துவகல்லூரியில் படித்து வந்தார். வூஹான் நகரில் கோவிட்-19 என்ற புதுவகை கரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், அங்கிருந்து கேரளாவுக்கு ஜனவரி மாதம் இறுதியில் வந்தார்.

அவருக்கு கரோனா நோய் தொற்றுபாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதும் அவர் திருச்சூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஆலப்புழா மற்றும்காசர்கோடுவை சேர்ந்த 2 பேருக்கு கரோனா பாதிப்பு இருந்தது. அவர்களும்சீனாவில் இருந்துதான் கேரளாவுக்கு திரும்பி உள்ளனர்.

இதனால், 3 மாணவர்களும் திரிச்சூர்அரசு மருத்துவமனையில் தனி வார்டில்சிகிச்சைப் பெற்று வந்தனர். இதன்தொடர்ச்சியாக, உடல்நலம் தேறிய ஆலப்புழா, காசர்கோடைச் சேர்ந்த 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 5 கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு நெகட்டிவ் முடிவு வந்தது. இதனால், 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முதலாவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் தேசிய நோய் கிருமி ஆய்வு மையத்துக்கு அண்மையில் அனுப்பட்டது.

அங்கு சோதனை செய்யப்பட்டதில் அவருக்கும் நெகட்டிவ் முடிவு கிடைத்துள்ளது. இதனால், மாணவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், கரோனா பாதிப்பு இருப்பதாக கேரள மாநிலம் முழுவதும் 2,242 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதில் 8 பேர் மட்டும் தனி வார்டில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

க்ரைம்

1 min ago

சினிமா

16 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்