12 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

By செய்திப்பிரிவு

தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு முதல் முறையாக புதிய பாடத் திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி 10-ம் வகுப்பில் 9 லட்சத்து 44,569 மாணவர்களும், 11-ம் வகுப்பில் 8 லட்சத்து 26,082 மாணவர்களும், 12-ம் வகுப்பில் 8 லட்சத்து 16,358 மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 25 லட்சத்து 87,009 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதவுள்ளனர்.

இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சலில் ஹால் டிக்கெட்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதேநேரம் தனித்தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இணையதளத்தில் (http://www.dge.tn.gov.in/) இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வெழுத உள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சரி செய்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனே அனுப்பி வைக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்