புதுச்சேரியில் அரசு பெண்கள் பள்ளிகளில் வழிகாட்டு நிகழ்வு: மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் அசத்தல்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் அரசு மகளிர் பள்ளிகளில் வழிகாட்டும் நிகழ்வுகளை அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் நடத்தி அங்குள்ள படிப்புகள், சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. தற்போது புதுச்சேரியில் உள்ள அரசு மகளிர் பள்ளிகளுக்கு சென்று வழிகாட்டும் நிகழ்வுகள் நடத்தி வருகின்றனர்.

தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சரவணன், துணை முதல்வர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடக்கும் இந்நிகழ்வுகள் தொடர்பாக கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் இம்மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கணிப்பொறி, மின்னணுவியல், சிவில், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, தையற்பயிற்சி, அழகுக்கலை பயிற்சி சேர்க்கை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடக்கும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க பிரிவுகளுக்கு ஏற்றபடி 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும்.

மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவோருக்கு பயிற்சியின்போது இலவசச் சீருடை, பாடப் புத்தகங்கள் மற்றும் மாதாந்திர ஊக்கத்தொகை தரப்படும். பயிற்சி முடிந்த பிறகு வேலைவாய்ப்பு உறுதி. பயிற்சிக் கட்டணம் எதுவும் இல்லை.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளிலும் பயிற்சிப் பிரிவுகள், சலுகைகள், வேலைவாய்ப்புகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி உட்பட பல பள்ளிகளில் இதை நடத்தியுள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

14 mins ago

சினிமா

20 mins ago

இந்தியா

1 min ago

கருத்துப் பேழை

10 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

மேலும்