செய்திகள் சில வரிகளில் - நேபாளத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம்: சுற்றுலா விடுதிக்கு சீல்

By செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் இருந்து நேபாளத்துக்கு 15 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த மாதம் சுற்றுலா சென்றது.

அவர்கள் மக்வான்புர் மாவட்டம்டாமன் பகுதியில் உள்ள விடுதியில் ஜனவரி 21-ம் தேதி தங்கியிருந்தபோது, அதில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் அறையில் வெப்பநிலையில் வைத்திருக்க உதவும் காஸ் ஹீட்டரில் இருந்து வெளியான வாயுவால், மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.

இதனைதொடர்ந்து, 8 பேரின் இறப்பு குறித்து விசாரிக்க அரசு சார்பாக கமிட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில், விடுதியின் மோசமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நிர்வாகம் காரணம்தான் 8 பேர் உயிரிழந்தனர் என்று நேபாள அரசுக்கு கமிட்டி அறிக்கை வழங்கியது. இதனால், விடுதிக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

மாணவர்களுக்கு வேலை கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

பாலியா

உத்தர பிரதேச மாநிலம் சன்வாரி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் அலோக் குமார் யாதவ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்களை அழைத்து, உணவு தானியங்கள் இருக்கும் தள்ளுவண்டியை பள்ளிக்கு எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

கனமான தள்ளுவண்டியை மிகவும் கஷ்டப்பட்டு மாணவர்கள் தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைத தளங்களில் பரவியது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு பிற வேலைக் கொடுத்ததாக தலைமை ஆசிரியர் அலோக் யாதவை உ.பி. கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

34 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்