அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெளிநாட்டு மொழிகளைக் கற்கவேண்டும்: உ.பி. முதல்வர்

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெளிநாட்டு மொழிகளைக் கற்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கோரக்பூரில் நடைபெற்ற விழாவொன்றில் நேற்று பேசிய அவர், ''மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெளிநாட்டு மொழிகளைக் கண்டிப்பாகக் கற்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலை கிடைக்கும்.

உலகிலேயே இந்திய ஆசிரியர்களுக்குத்தான் தேவை அதிகமாக உள்ளது. இந்த சூழலை ஆசிரியர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆசிரியர்களின் தேவை அதிகம் உள்ள நாடுகளை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கண்டறிய வேண்டும். நாடுகளுக்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மொழிகளை பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாற்றலாம்.

உத்தரப் பிரதேச அடிப்படைக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 70 சதவீத ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இது ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது'' என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்