சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு 

By செய்திப்பிரிவு

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற இளங்கலை, முதுகலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் சென்னை பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இதில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ. உள்ளிட்ட இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான ஒற்றைப் படை ( 1, 3, 5) செமஸ்டர் தேர்வுகளும், எம்.ஏ., எம்.எஸ்சி, எம்.காம். உள்ளிட்ட முதுகலை மாணவர்களுக்கான ஒற்றைப்படை(1, 3, 5) செமஸ்டர் தேர்வுகளும் (1, 3 ) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றன.

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை பல்கலைக்கழகம், செமஸ்டர் தேர்வு முடிவுகளை ஜனவரி கடைசி வாரத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் தேர்வுகள் முடிவுகள் இன்று (ஜன.31) வெளியாகியுள்ளன.

மதிப்பெண்களை எப்படித் தெரிந்து கொள்வது?
https://egovernance.unom.ac.in/n19/ மற்றும் http://ideunom.ac.in/ ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து, மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்.

முன்னதாக மழை காரணமாக டிசம்பர் 2- ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

20 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

28 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

34 mins ago

ஆன்மிகம்

44 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்