6 கோடி இந்திய விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதியுதவி: பிரதமர் மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் உள்ள 6 கோடி விவ சாயிகளுக்கு நிவாரண நிதியாக வங்கி கணக்கு மூலம் ரூ.12 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

3-வது உலகளாவிய உருளைக் கிழங்கு மாநாட்டின் தொடக்கவிழா குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று தொடங்கியது. 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், தொடக்க விழாவில்காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

2022-ம் ஆண்டுக்குள் இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதன்விளைவாகவும், மத்திய அரசின் கொள்கை மற்றும் விவசாயிகளின் கடின உழைப்பினாலும் சில தானிய வகைகள், உணவு பொருட்கள் உற்பத்தியில் உலக அளவில் முதல் 3 முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இடம் கிடைத்துள்ளது.

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மாத தொடக்கத்தில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, சுமார் 6 கோடி விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.12 ஆயிரம் கோடி வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்றுமத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

43 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்